ஊழிய பிரதிஷ்டை
Jeffersonville, Indiana, USA
62-1104E
1அவர் தேவனாக இருக்கிறார், அவ்வளவு தான். அவர் எங்கும் பிரசன்னராயிருக்கிறார் (omnipresent). பாருங்கள்? அவர் ஓர் இடம் கூட விடாமல் எங்கும் இருக்கிறார். நான் நம்பியிருக்கும்படி அதனிடமே விட்டுவிட்டு, அது எங்ஙனம் பற்றிப்பிடித்துக்கொண்டது என்பதைப் பார்ப்பேன் என்று நான் சற்றுமுன்பு எண்ணிக் கொண்டேன், உங்களுக்குத் தெரியும். அவர் சர்வ வியாபியாயிருக்கிறார். அவர். அதுதான் அவரை தேவனாக ஆக்குகிறது, ஏனென்றால் தேவன் மட்டுமே சர்வ வியாபியாக இருக்க முடியும். ஆகையால் தான் அவர், “இப்பொழுது மனுஷகுமாரன் பரலோகத்திலும் இருக்கிறார்” என்று கூறினார். புரிகிறதா? பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் ஏறினவன் ஒருவனுமில்லை.“ அங்கே அவர் ஒரு வீட்டின் மேலே நின்று கொண்டிருந்தார், இருப்பினும் அவர் பரலோகத்தில் இருந்தார். பாருங்கள்? அவர் சர்வவியாபியாக இருக்கிறார், அதுதான் அவரை தேவனாக ஆக்குகிறது. ஒரு காரியம் மட்டுமே சர்வ வியாபியாக இருக்க முடியும், அவர் தான் தேவன்.
2இப்பொழுது, இன்றிரவு, சபைக்குக் கொடுக்கப்பட்ட சகோதரன் நெவில் அவர்களுடைய அற்புதமான செய்தியின் மிக கடைசியான பாகத்தை நான் சற்றுமுன்பு கேட்டேன். கர்த்தர் அதை ஆசீர்வதித்து, அதனோடு ஆசீர்வாதத்தைக் கூட்டுவாராக. மேலும், பாருங்கள், நீங்கள் அங்கேயே, அதை தியானம் செய்வதில் சார்ந்திருக்கும்படியாக அவர் உங்களை விட்டார். அது நல்லது. எல்லா நேரமும், அதை உங்கள் இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் இப்பொழுது, இன்றிரவில் நமக்கு இராப்போஜனம் இருக்கப்போகிறது. நாமெல்லாரும் மகிழும் நேரமாக அது இருக்கிறது என்பதில் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இயேசு நம்மிடம் விட்டுச்சென்ற, ஒரு கற்பனையைக் கைக்கொள்ளும்படியாக ஒரு கிறிஸ்தவன் வருகிறான் என்பதை அறிந்து கொள்ளும்போது, அது அவனுடைய இருதயத்தின் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இயேசு நம்மிடம் விட்டுப்போன இரண்டு கற்பனைகள் உண்டு, இரண்டு முக்கியமான காரியங்கள். அவைகளில் ஒன்று இராப்போஜன ஆராதனை, மற்றொன்று தண்ணீர் ஞானஸ்நானம். மற்றப்படி, அங்கே “தொடு என்றோ, நடத்து என்றோ” அல்ல, அதில் வேறு எதுவும் விடப்பட்டிருக்கவில்லை, பாருங்கள், எந்த நோன்பு இருத்தலோ (பிராயசித்தம் செய்தலோ), உங்கள் முழங்கால்களில் கஷ்டப்பட்டு இழுத்துச் செல்வதோ, மற்றும் இந்த மற்ற வகையான காரியங்களோ அல்ல. அது வெறுமனே தண்ணீர் ஞானஸ்நானம் மற்றும் இராப்போஜனமாக இருக்கிறது. எனவே நாம் இதற்கு வரும்படிக்கு எப்போதுமே சந்தோஷமாயிருக்கிறோம்.
“ஜீவவிருட்சத்திற்குள் பிரவேசிப்பதற்கும், பட்டணத்திற்குள், அந்தப் பரிசுத்த பட்டணத்திற்குள் பிரவேசிக்க அதிகாரமுள்ளவர்களாவதற்கும், அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள், நாய்களும், விபசாரக்காரரும், அதைப்போன்ற மற்றவர்களும் புறம்பே தள்ளப்படுவார்கள் (cast away)” என்று வேதாகமம் கூறியுள்ளதை நான் விசுவாசிக்கிறேன்.
அதன்பிறகு இராப்போஜன ஆராதனையானது எப்போதுமே மிகவும் கண்டிப்பான ஆராதனையாக இருக்கிறது, ஏனென்றால் அது நம்மை ஒரு பலப்பரீட்சைக்குக் (showdown) கொண்டுவந்து விடுகிறது, பாருங்கள், நாம் சற்று நேரத்தில், வேதவாக்கியத்திலிருந்து வாசிக்கையில்.
3இன்றிரவு சகோதரன் பிரவுன் அவர்கள் நம்மோடு இருக்கிறார், அவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், சகோதரன் டாச் அவர்களும், சகோதரன் பிரவுன் அவர்களும், மற்றும் சகோதரன் மெக்கின்னி அவர்களும் நம்மோடு இருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் மற்ற சகோதரர்களுடைய பெயர்களை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் மேலே ஓஹியோவிலிருந்து வந்திருக்கும் அவர்களை நாம் கொண்டிருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறோம். இங்கேயிருக்கும் சகோதரன் பாட் டைலரையும், அங்கே பின்னாலிருக்கும் சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களையும், எனக்குப் பின்னாலிருக்கும் சுவிசேஷத்தின் ஊழியக்காரர்களையும் நான் காண்கிறேன். சகோதரன் காலின்ஸ் மற்றும் சகோதரன் ஹிக்கர்சன் அவர்களும் கூட இருக்கிறார்கள்.
இப்பொழுது, சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களே, மனைவியின் விரல் எப்படியிருக்கிறது? சரியாகிக் கொண்டிருக்கிறது. உ-ஊ. அவளுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது, அன்றொரு இரவில் என்னை தொலைபேசியில் கூப்பிட்டார்கள். வேறு தொலைப்பேசி அழைப்புகளிலிருந்து, நான் உள்ளே வந்த நேரத்தில், அது ஏறக்குறைய பன்னிரண்டு, ஒரு மணி இருக்கும், நான் அந்த நேரத்தில் அவளுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவில்லை ; அடுத்த நாள் காலையில் அவள் ஊசி நூலால் ஆடையில் தையலிட்டுக் கொண்டிருந்தாள், மற்றும் வேறு ஏதோ ஒரு வகையில், அந்த ஊசியை தன்னுடைய கையினூடாக விசையோடு வலுவாக குத்தி விட்டபடியினால், அந்த எலும்பு அல்லது வேறு ஏதோவொன்றைச் சுற்றிலுமாக அது கொளுவி விட்டது. அவள் அதை இந்த விதமாக வெளியே இழுக்க முயற்சித்தாள். துணி தைக்கும் இயந்திரத்தை விட்டு, சக்திமிக்க இயந்திரத்தை விட்டு அதை இழுக்க முயன்றாள். அதை வெளியே இழுக்க முயற்சிக்கையில், அதை இந்த விதமாக பிரித்தெடுத்தாள். அந்தச் சிறு பெண் தன்னுடைய பற்களைக் கொண்டு, அதை எடுக்க முயன்று, அதைக் கொண்டு அதை இழுக்க முயற்சித்த போது, தன்னுடைய கையில், வேறொரு இடத்திலிருந்து அதைப் பிரித்து எடுத்துக் கொண்டாள்.
அவள், “வெறுமனே ஜெபம் செய்யும், அது சரியாகிவிடும்” என்றாள். அந்த உண்மையான விசுவாசம் எனக்குப் பிடிக்கும், அங்கே அந்த இடத்தோடு பற்றிப்பிடித்துக்கொள்வது. எனக்கு அது பிடிக்கும். சகோதரி ஸ்டிரிக்கர் அவர்கள் ஒரு அருமையான சிறு கிறிஸ்தவ சகோதரி, நான் இன்றிரவு இங்கே அவளைக் காணவில்லை, எனவே தான் அவளைக் குறித்து என்னால் பேச முடிகிறது. அவள் இருக்கிறாளா? ஓ , நல்லது, நான் அமைதியாக இருப்பது நல்லது. அவளும் கூட இங்கேயிருக்கிறாள். சரி. நல்லது, சகோதரி ஸ்ட்ரிக்கர் அவர்களே, எப்படியும், நீங்கள் இருக்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.
4இப்பொழுது, கொஞ்ச நேரத்திற்கு முன்பு, சகோதரன் மெக்கின்னி அவர்கள் கேட்டுக்கொண்டார் என்று நம்புகிறேன், அது... நாங்கள் வருந்துகிறோம். பில்லிபால், ஊழியப்பிரதிஷ்டையைக் குறித்தோ, அல்லது வேறுவழியில் சொன்னால், இந்தக் கூடாரத்திலிருந்து வேதப்பூர்வமான ஊழியப்பிரதிஷ்டையைக் குறித்தோ சற்றுமுன்பு ஞாபகப்படுத்தினான். சகோதரன் மெக்கின்னி அவர்களே, அது சரிதானா? நான் அதைச் சரியாகத்தான் புரிந்து கொண்டேனா? இப்பொழுது, அதற்கான அனுமதிச்சீட்டு (license) கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்பொழுது, இந்தக் காலையில், நான் பேசும்படி இங்கேயிருக்கப் போகிறேனா என்று எனக்குத் தெரியாதிருந்தது. ஆனால் இங்கே வந்த பிறகு, இங்கேயிருக்கும் நம்முடைய சகோதரன், தயவும் அன்பும் நிறைந்தவராய், வந்து பேசும்படி கேட்டுக்கொண்டார். நாங்கள் சபை என்றால் என்னவென்றும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றால் என்னவென்றும், யார் அதைப் பெற்றிருக்கிறார் என்றும், யார் அதைப் பெற்றிருக்கவில்லை என்றும், நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது என்றும் பேசினோம். பாருங்கள்? எனவே, அந்தச் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், நம்முடைய சபைக்கு வரக்கூடியவர்களான, அங்கே ஒலிநாடாக்களை வைத்திருக்கிற அந்தப் பையன்களிடம் அது இருக்கிறது, ஏனென்றால் அது துவக்கம் முதல் முடிவு மட்டுமாக, கண்டிப்பான உபதேசமாக இருக்கிறது.
5அதன்பிறகு, சபை ஸ்தாபனங்கள் போன்று அப்படிப்பட்ட எந்தக் காரியமும் கிடையாது என்ற இந்த வாக்குமூலத்தை நான் கொடுத்தேன். அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அது தங்கும் விடுதி ஸ்தாபனங்களாக (lodge denominations) இருக்கின்றன. நீங்கள் அந்த சபைக்குள் (Church) பிறக்க மாத்திரமே செய்கிறீர்கள். யாரோ ஒருவர், “நான் ஒரு பிரஸ்பிடேரியன்” என்று கூறும்போது, நீங்கள் பிரஸ்பிடேரியன் விடுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். புரிகிறதா? ஏனென்றால் நீங்கள்... பிறந்திருக்கிறீர்கள். நான் பாப்டிஸ்டாக இருக்கிறேன்.“ அப்படியானால் நீங்கள் பாப்டிஸ்டு விடுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள், பாப்டிஸ்டு சபையை அல்ல. அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. நாம் அதைச் சரியாகப் பின்னால் திருப்பிப் பார்த்து, வேதாகமத்தில் அதைக் கண்டுபிடித்தோம், அப்படிப்பட்ட ஒரு காரியத்தைக் கூறுவதும் கூட தேவதூஷணமாகும். அது சரியே. வேதாகமம் அதைக் கூறுகிறதா என்று மொழியியல் இணை வேதாகமத்திலுள்ள [Emphatic Diaglott - மொழியியல் இணை வேதாகமம் என்பது 1864-ம் ஆண்டு பெஞ்சமின் வில்சன் அவர்களால் வெளியிடப்பட்ட, புதிய ஏற்பாட்டின் இருமொழி இணை மொழிபெயர்ப்பாகும் (two-language polyglot translation) - மொழிபெயர்ப்பாளர்) அந்த மூலமுதலான கையெழுத்துப்பிரதியிலிருந்து அதைச் சரியாக வாசித்துப் பாருங்கள்... சபை என்று அழைக்கப்படும் இந்த வல்லமையானது, ”முழுவதும் தூஷண நாமங்களால் நிறைந்திருக்கிறது.“ பாருங்கள்? தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டு, கிறிஸ்தவர்களைப் போன்று தங்களைத் தாங்களே அமைத்துக்கொண்டு, எந்தவிதமான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புரிகிறதா? இங்கே சபையில் இருக்கிற ஒரு சகோதரி கண்டு, இந்தக் காலையில் நாம் இங்கே விவரித்த, ஒரு சொப்பனத்தோடு அது நிச்சயமாகவே ஒப்பிடப்படும்படியாக உள்ளது. இப்பொழுது, வேதாகம காலங்களில், அவர்கள் ஒரு ஊழியக்காரனை நியமித்தவிதம் என்னவென்றால், இந்த ஊழியனுக்குள் இருந்த ஒரு தேவவரத்தை அங்கீகரித்ததின் மூலமாகத்தான் (recognizing a gift of God), ஊழியம்.
6அங்கே தான் நம்முடைய பிந்தைய நாள் பரிசுத்தவான் (Latter-day Saint)... என்று நினைக்கிறேன். அல்லது பிந்தைய நாள் பரிசுத்தவான் அல்ல. உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். அங்கே தான் பின்மாரி சகோதரர்கள் (Latter-rain brethren) கரங்களை வைத்து, நாங்கள் உனக்கு சுகமளிக்கும் வரத்தைக் கொடுக்கிறோம். நாங்கள் உனக்குத் தீர்க்கதரிசன வரத்தைக் கொடுக்கிறோம்“ என்று கூறினதின் மூலமாக, அவ்வளவு பயங்கரமான ஒரு தவற்றைச் செய்தார்கள். அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியம் கிடையாது.
“வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலேயே கொடுக்கப்படுகின்றன.” தேவனே கொடுக்கிறார். “தேவன் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், இன்னும் மற்றவைகளையும் சபையில் நியமித்திருக்கிறார்.” புரிகிறதா? ஒரு மனிதன் வேறொரு மனிதனுக்கு ஒரு வரத்தைக் கொடுப்பது போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. வரங்கள் தேவனிடமிருந்து தான் வருகின்றன, அவை தேவனிடமிருந்து மாத்திரமே வருகின்றன.
சபைக்குள் வருவதற்கு, நீங்கள் அதற்குள்ளே பிறக்கிறீர்கள். அதற்குள் வருவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. அப்போது தான் நீங்கள் தேவனுடைய அந்த குடும்பத்தின் ஒரு அங்கத்தினனாக, தேவனுடைய குமாரனும் குமாரத்தியுமாக இருக்கிறீர்கள். ஒரு ஸ்தாபனம் அல்ல, ஆனால் அந்தக் குடும்பத்தின் ஒரு - ஒரு அங்கத்தினன்.
7இப்பொழுது, அவன் கூறுவது போன்று, வேதாகமக் காலங்களில், அவன் தனக்கு ஊழியம் செய்யும்படியான வரத்தை உடையவனாயிருந்தான் என்பதாக பவுல் தீமோத்தேயுவிடம் கூறின போது, அவர்கள் அந்த வேதவாக்கியத்தை அகற்றிப்போட்டு விட்டு, அதற்குப் பதிலாக மாற்றிப்பொருத்தி விட்ட னர்.
“நல்லது,” அவன், “அது அவனுடைய பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளிருந்து வந்தது. பாருங்கள்? அவனுடைய பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளிருந்து வந்த வரமானது, கீழே அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவன் திடநம்பிக்கை உடைய ஒரு கிறிஸ்தவனாக இருந்தான், அதனோடு கூட, அவனுக்குள் ஒரு பேசும் வரமும் (a gift of speaking) இருந்ததை அவர்கள் கவனித்தார்கள். (எனவே) ஒரு அங்கீகாரமாக (recognition - அங்கீகரித்தலாக, அடையாளம் காணலாக, ஏற்றுக்கொண்டதற்கான அடையாளாக, ஒப்புக்கொள்ளுதலாக) அவர்கள் தங்கள் கரங்களை அவன் மேல் வைத்தார்கள். சபையின் மூப்பர்கள் இந்த மனிதனை அங்கீகரிப்பதாக, அவன்மேல் கரங்களை வைத்தார்கள், மேலும் அப்போஸ்தல ஊழியத்தை நியமித்தலானது, அவன் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு, அவன் மேல் கரங்களை வைப்பதாகும். அந்த தேவவரம் அவனுக்குள் இருந்தது என்பதை விசுவாசித்த இந்த சகோதரர்களுடைய ஒரு சாட்சியாக, அவர்களை வெளியே அனுப்பினார்கள். அவர்கள் ஊழியக்காரர்களுக்கும் கூட அந்த விதமாகத்தான் செய்தார்கள், கரங்களை வைத்து, ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுப்பதன் மூலமாக, அவன் ஏதோவொன்றிற்காக அழைக்கப்பட்டிருந்தான் என்று, இந்த சகோதரனுக்குள்ளே அந்த வரமானது கிரியை செய்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டதாக, தேவனுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கையாக, ஒருமித்து வேலை செய்யும்படிக்கே அவர்கள் அவ்விதம் செய்தார்கள். “நாமும் அதையே விசுவாசித்தோம்.” தேவன் அவனை ஆசீர்வதிக்கும்படியாக, அவர்கள் அவன் மேல் கரங்களை வைத்தார்கள். அது ஒரு ஒப்புதலுறுதியாக இருந்தது.
8என்னால்..... முடியாதிருந்தது போல. “இயேசு மாத்திரம்” என்று இருப்பதன் மூலமாக, யாரோ ஒருவர் எப்போதுமே என்னைக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இயேசு மாத்திரம் என்பதால், ஞானஸ்நானத்தில், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தை” உபயோகப் படுத்துவதினால், நான் நிச்சயமாகவே அதனோடு இணங்குகிறேன். ஆனால், தண்ணீர் பாவங்களை மன்னிக்கிறது என்று நீங்கள், மறுபிறப்புக்காக ஞானஸ்நானம் கொடுக்கும் போது, என்னால் அதை விசுவாசிக்க முடியாது. இல்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் பாவங்களுக்கான பரிகாரமாக இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே, மறுபிறப்புக்காக ஞானஸ்நானம் கிடையாது, ஆனால் அறிக்கையினிமித்தமாகவே ஞானஸ்நானம். உங்கள் ஞானஸ்நானம் என்பது, கிருபையின் இந்த உள்ளான கிரியையானது செய்து முடிக்கப்பட்டு விட்டது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்ற உங்கள் அறிக்கையாக இருக்கிறது.
ஆகையால், பாப்டிஸ்டு சபைக்குள் வந்து, நீங்கள் உங்கள் அறிக்கையை செய்து, அவர்களுடைய சபைக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறீர்கள் என்று அவர்கள் கூறும்போது, நான் பாப்டிஸ்டு ஜனங்களோடு போகிறேன். அந்த பாப்டிஸ்டு விசுவாசத்தில், நீங்கள் அந்த சபைக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுவது வரையில், அதெல்லாம் சரிதான்.
ஆனால், இப்பொழுது, கிறிஸ்துவுக்குள் வரும்படிக்கு, நீங்கள் மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறீர்கள்.
9அதன்பிறகு நீங்கள் உங்கள் சபைக்கு வரும்போது, அந்த ஞானஸ்நானமானது செய்கிற ஒரே காரியம் என்னவென்றால்.... கிறிஸ்து மரித்து, மூன்றாம் நான் மறுபடியும் உயிர்த்தெழுந்து விட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்ற ஒரு சாட்சியாகவே அது இருக்கிறது. நீங்கள் அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு விட்டீர்கள், நீங்கள் இனி உலகத்தின் காரியங்களுக்கு மரித்து விட்டீர்கள். நீங்கள் அவரோடு கூட மரித்து, உயிர்த்தெழுதலில் அவரோடு கூட எழுந்து விட்டீர்கள் என்பதையே உலகத்திற்குக் காட்டுகிறீர்கள். கிருபையின் உள்ளான கிரியையானது செய்து முடிக்கப்பட்டு விட்டது என்பதற்கான வெளிப்படையாக தெரிவிப்பதாகவே அது இருக்கிறது. உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான். நீங்கள் செய்ய வேண்டியிருந்த ஒரே காரியம் என்னவென்றால், முன்னால் சென்று, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டீர்கள், (அப்படியானால்) இயேசு மரிக்க வேண்டி இருந்திருக்காதே. எப்போதுமே ஜீவனைக் கொண்டு வர மரணம் அவசியமாயிருக்கிறது.
ஏனென்றால், நாம் மரணத்தின் மூலமாக மாத்திரமே ஜீவிக்கிறோம். எதுவும் மரணத்தின் மூலமாகவே ஜீவிக்கிறது. நாம் சாப்பிடும் போது, மரித்த வஸ்துக்களைக் கொண்டே நாம் உயிர்வாழ்கிறோம். நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு நாளும், சரீரபிரகாரமாக, ஜீவிக்கும்படி, உங்களுக்காக ஏதோவொன்று மரிக்க வேண்டியிருக்கிறது. “நல்லது,” நீங்கள், “நான் இறைச்சி சாப்பிடுவதில்லை” என்று கூறலாம். நல்லது, நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள்... எதோவொன்று மரிக்கத்தான் செய்கிறது. அது சரியே நீங்கள் ஒரு உருளைக்கிழங்கைப் புசிக்கிறீர்கள், அது மரிக்கிறது. நீங்கள் பரட்டைக்கீரையை புசிக்கிறீர்கள், அது மரிக்கிறது. நீங்கள் ரொட்டியைப் புசிக்கிறீர்கள், கோதுமை மரிக்கிறது, சோளம் மரிக்கிறது, அது என்னவாக இருந்தாலும், அவ்வாறு தான் இருக்கிறது. ஏதோவொரு வடிவிலான ஜீவன் மரிக்கிறது, ஏனென்றால் நீங்கள் மரித்த பொருளைக் கொண்டு மாத்திரமே ஜீவிக்கிறீர்கள்.
10அப்படியானால் நீங்கள் இயற்கையான பிரகாரமாக, மரித்த பொருட்களைக் கொண்டே, நீங்கள் ஜீவிக்க வேண்டியிருந்தால், நீங்கள் நித்தியமாக வாழும்படிக்கு மரித்த ஏதோவொன்று அதற்கு எவ்வளவு அதிகமாகத் தேவையாயிருக்கிறது? மனிதன் மீண்டும் ஜீவிக்க முடியும்படிக்கு கிறிஸ்து மரித்தார். அது மட்டுமே ஜீவனை உடையதாயிருக்கிறது, அது கிறிஸ்துவுக்குள் தான் இருக்கிறது.
இப்பொழுது, இந்த வெளிப்படையான தெரிவித்தல்களானது. நியமிக்கப்பட்ட ஒரு மெதோடிஸ்டு ஊழியக்காரராயிருக்கிற, சகோதரன் மெக்கின்னி அவர்களை நாம் காண்கிறோம், அவரோ முழு சுவிசேஷத்தின் வெளிச்சத்தைக் கண்டிருந்தார். நாம் அவரை நம்புகிறோம், அவர் ஒரு அருமையான சகோதரன், அவருக்கு ஒரு அருமையான குடும்பம் இருக்கிறது. அவர் நம்மிடம் வந்திருக்கிறார். அவர், அங்கே ஓஹியோவில், சகோதரன் மற்றும் சகோதரி டாச் அவர்களோடும், அங்கேயிருக்கும் மற்ற சகோதரர்களோடும், ஒரு சிறு கூட்டத்தை ஒன்றாக பேணிக்காத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நாம் இங்கே அவரை நேசிக்கிறோம். அவர் தேவனால் அழைக்கப்பட்ட ஒரு மனிதர் என்று நாம் அவரை நம்புகிறோம். எனவே, நாம் சகோதரன் ஜீம் சிங் அவர்களுக்கும், சகோதரன் கிரகாம் ஸ்நெல்லிங் அவர்களுக்கும், சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் அவர்களுக்கும், சகோதரன் வில்லார்டு கிரேஸ் அவர்களுக்கும், நாம் இங்கிருந்து வெளியே அனுப்பும் ஒவ்வொருவருக்கும் இதைச் செய்கையில், நாம் அவர்களை இந்தச் சபையோருக்கு முன்பாக கொண்டு வந்து, இந்த சாட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்போம். நீங்கள் கேட்டிருக்கிற வண்ணமாகவே, அதே முறையைப் போன்றே (இதைச் செய்வோம்). அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்று நாம் விசுவாசிக்கிற அவர்கள் மேல் கரங்களை வைத்து, அதற்கு நம்முடைய ஒப்புதலுறுதியைக் கொடுத்து, தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவர்களோடு கூட போகும்படி வேண்டிக்கொள்வோம்.
நீங்கள் வேதாகமத்திற்கு வெளியே வித்தியாசமான ஏதொவொன்றைக் கண்டுபிடிக்கலாம்; நீங்கள் அவ்வாறு கண்டுபிடிப்பீர்களானால், அது வேதாகமத்திற்கு வெளியே இருக்கிறது. ஊழிய பிரதிஷ்டையில், அவர்கள் மேல் கரங்களை வைப்பது தான், மிகச் சரியாக வேதாகமக் காலங்களில் அவர்கள் அந்தவிதமாகத்தான் அதைச் செய்தார்கள். அவர்கள் டீக்கன்மார்கள் மேல் கரங்களை வைத்து, அவர்களை சபையில் வைத்தார்கள். எல்லாமே கரங்களை வைப்பதின் மூலமாகத் தான், ஒரு கொத்து தாள்களில் பதிவு செய்து, ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டோடு, அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றோடு சேர்ந்து கொள்வது அல்ல. அவர்கள் கரங்களை (அவர்கள் மேல் வைத்து, பரிசுத்த ஆவிக்குள் அவர்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அவனைப் போக விட்டார்கள். ஆமென். தேவன் தமக்கு விருப்பமான விதத்தில் அவனை வழிநடத்துகிறார். அவ்வளவு தான். அது, அதை அந்தவிதமாகச் செய்வதைத் தான் நாம் நம்புகிறோம்.
11சகோதரன் மெக்கின்னி அவர்களே, நீர் வந்திருக்கிற விதத்தில் நீர் வருவதைக் காண நாங்கள் இன்றிரவு சந்தோஷமடைகிறோம். நீர் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் காரியமானது, கிறிஸ்துவுக்காக ஏதோவொன்றைச் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான்.
நாங்கள் எந்த சபையோடும், எந்த சபையின் எந்த அங்கத்தினரோடும், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கம், அது என்னவாக இருந்தாலும், அவர்களோடுள்ள ஐக்கியத்தை முறித்துக்கொள்ள மாட்டோம். தேவனுடைய ஆவியானவர் தனிப்பட்ட நபர்களோடு இடைப்படுகிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இன்று, சபை என்று அவ்வாறு அழைத்துக்கொள்ளும் முழு சபை உலகத்திலுமுள்ள, ஒவ்வொரு சபையிலும், அங்கே கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். தேவனை நேசிக்கிற மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், லூத்தரன்களும் அங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவரைக் குறித்து அவர்களுக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவென்றால், அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு நெருக்கமாகவும், அவர்களால் எவ்வாறு நெருக்கமாக இருப்பது என்று அவர்களுக்குத் தெரியுமோ அவ்வளவு நெருக்கமாகவும், அல்லது எவ்வாறு ஜீவிப்பது என்று அவர்களுக்குப் போதிக்கப்பட்ட வண்ணமாகவும் அவர்கள் ஜீவிக்கிறார்கள். சில ஜனங்கள், தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம், தங்கள் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து, சபையைச் சேர்ந்து கொள்வது தான் என்று நினைக்கிறார்கள், செய்யும்படி அவர்களுக்குத் தேவையாயிருப்பது எல்லாம் அவ்வளவு தான். தாயார் ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். தகப்பனார் ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தார். நல்லது, அது, பாருங்கள், செய்யும்படி அவர்களுக்குத் தெரிந்தது எல்லாமே அவ்வளவு தான்.
12ஆனால் யூதர்களுடைய இந்தத் தலைவனிடம் இயேசு கூறினார், இந்தக் காலையில், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்யத்தைக் காணக் கூட அவனால் முடியாது, நீங்கள் எந்தச் சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல. அவர் சொன்னார், அவர் புது பிறப்பைக் குறித்து பேசினார்.
அவன், ஒரு வயதான மனிதனாகிய, நான், தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்து, மற்றும் அதைப்போன்ற விதமாக செயல்புரிந்து, மறுபடியும் பிறக்க வேண்டுமா?“ என்று கேட்டான்.
அதற்கு அவர், “நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும், இவைகளை அறியாமல் இருக்கிறாயா?” என்றார்.
சபை உலகமானது வெறுமனே ஒருகூட்டம் கோட்பாடுகளாக இருக்கும் அளவுக்கு அது எப்படியாக மிகவும் ஸ்தாபிக்கப்பட்டு, திரிக்கப்பட்டுள்ளது? அது ஆவிக்குரிய காரியங்களுக்குள் மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளை வைத்திருக்கிறது. ஆவிக்குரிய காரியமானது, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து தன்னைத்தானே வேறுபிரித்துக் கொண்டு விடும். அந்தப் பழமொழியைப் போன்று, நீங்கள், எண்ணெயையும் தண்ணீரையும் உங்களால் ஒன்றாக சேர்க்க முடியாது. அது கலவாது. அவ்வளவுதான். அங்கே, ஒன்று சேரும்படியான எந்த மூலப்பொருட்களும் அதில் அங்கே கிடையாது.
13இப்பொழுதும் அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மனிதர்களை அழைக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் மனிதர்களை நியமிக்கிறார். சகோதரன் மெக்கின்னியின் மேலோ, அல்லது மற்ற எந்த ஊழியக்காரர் மேலோ, தொடர்ந்து பல மணி நேரங்களோ, முழு நாளுமோ, கரங்களை வைக்க நம்மால் முடிந்தாலும், அவரால் கையொப்பமிட முடிந்த நீளமான தாளை அவரிடம் கொடுத்து, கோட்பாடுகளுக்கு சத்தியம் செய்து கொடுத்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அது ஒருக்காலும் அவருக்கு ஒரு காரியத்தையும் செய்யாது. ஆனால், பரிசுத்த ஆவியானவர் ஒருமுறை அவரை தட்டட்டும். அதுவே போதுமானது. அதுதான் அதைச் செய்கிறது. யாருமே வேறு எதையும் அவரிடம் கூற வேண்டியதில்லை. அவர் செய்து முடித்து விட்டார். புரிகிறதா? அவ்வளவு தான். அதன்பிறகு, நாம் செய்யக் கூடிய ஒரே காரியம் என்னவென்றால், அந்த ஸ்தானத்துக்குள் நம்முடைய சகோதரனை நாம் அங்கீகரிக்கும் (ஏற்பிசைவு தெரிவிக்கும் ஒரு ஐக்கியம் தான்.
சகோதரன் மெக்கின்னி, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீர் சற்றுநேரம், இங்கே மேலே வருவீர், முன்னால் வாரும்.
சகோதரன் நெவில், சகோதரன் காலின்ஸ், ஊழியக்காரர்களே, நீங்கள் அருகில் நிற்க விரும்புவீர்களானால், நீங்கள் சற்று நேரம், இங்கே மேலே வருவதில் நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்போம்.
சகோதரன் மெக்கின்னி அவர்களே, நீர் இந்தவிதமாக வந்து, சபையோர் பக்கம் திரும்புவீரானால், சரியாக இங்கே இந்த விதமாகத் திரும்புவீரானால்.
எத்தனை பேருக்கு சகோதரன் மெக்கின்னி அவர்களைத் தெரியும், இங்கே சுற்றிலும் இருக்கும் எத்தனை பேர் அவரைச் சந்தித்திருக்கிறீர்கள்? அவர் ஒரு தெய்வபக்தியுள்ள மனிதர் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நிச்சயமாக.
14சகோதரன் மெக்கின்னி அவர்களே, நாங்கள் உமது பக்கத்தில், இந்த சபையாரோடும் கூட, உம்முடைய பக்கமாக அருகில் நின்று கொண்டிருக்கையில், முழு சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுவதன் ஐக்கியத்தை நீர் ஏற்றுக்கொண்டுள்ளதை அறியும் போது நாங்கள் இன்றிரவு சந்தோஷமாயிருக்கிறோம், அது தேவனுடைய கிருபையினாலே, வேதாகமத்தின் நியமத்திற்கு ஆதரவு கொடுக்கும்படியாக, நீர் தீர்மானம் பண்ணினதாயுள்ளது. அதைக் குறித்து எது என்ன கூறினாலும், அதைப் பொருட்படுத்தாமல், நீர் தேவனுடைய நித்திய வார்த்தையின் மேல் நிலைநிற்பதையே தெரிந்து கொண்டீர். அப்படியானால், ஸ்தாபனமானது அதை பக்கவாட்டாக உதைத்துத்தள்ள என்னதான் முயற்சித்தாலும், பரவாயில்லை , நீர் அது எழுதியிருக்கிறவிதமாகவே சரியாக நிற்கிறீர். நீர் சரியாக அதனோடு தரித்திரும். அதுதான் வழியாகும். அந்தவிதமாகத்தான் நாம் இங்கே விசுவாசிக்கிறோம். இல்லையா? [சபையோர், ஆமென்“ என்கின்றனர் - ஆசிரியர்.) எல்லாரும் அதை அந்த விதமாகத்தான் விசுவாசிக்கிறோம். தேவனுடைய கிருபையானது எப்போதும் உம்மோடு கூட இருப்பதாக
இப்பொழுது, தேவன் நம்முடைய சகோதரனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று, நீங்கள் உங்கள் சொந்த ஜெபத்தைச் செய்யுங்கள்.
சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டும், சூரியனானது துரிதமாக அஸ்தமித்துக் கொண்டும் இருக்கிறது, கிறிஸ்துவின் வருகையானது சமீபமாக இருக்கிறது. தேவன் இந்த வாலிபனின் ஆத்துமாவை ஆவியின் அப்படிப்பட்ட ஒரு ஞானஸ்நானத்தினாலும், அபிஷேகத்தினாலும் எச்சரிப்பு கொடுத்து, அங்கே வெளியே சென்று, கர்த்தருடைய வருகைக்கு முன்பாக, பத்தாயிரக்கணக்கான ஆத்துமாக்களை இரட்சிக்கப்பண்ண வேண்டுமென்பது தான் என்னுடைய உத்தமமான ஜெபமாயிருக்கிறது. ஊழியத்தில் இவர் நமக்குத் தேவையாயிருக்கிறார் என்பதை தேவன் அறிவார்.
சகோதரன் மெக்கின்னி அவர்களே, இங்கேயிருக்கும் இந்த சபையைப் போலவும், இந்த ஒரு கூட்ட ஜனங்களைப் போலவும், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஒரு சபை என்பது ஸ்தாபனமாக இல்லாமல், ஒன்றாகக் கூடி வரும் ஒருகூட்ட ஜனங்களாகும். அது இங்கேயிருக்கும் ஒரு நபரைக் கொண்டு உண்டாக்கப்படுவதில்லை, அவ்வாறு இருக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் இங்கே வருகிறீர்கள், அல்லது மற்ற எந்த சபையும், உங்களை ஒரு அங்கத்தினனாக ஆக்கிக்கொள்ளும். கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு அங்கத்தினனாக இருப்பதற்கு அங்கே ஒரே ஒரு வழி தான் இருக்கிறது, அது, பரிசுத்த ஆவியினாலே, நீங்கள் அதற்குள் பிறப்பதாக இருக்கிறது. நம்முடைய சகோதரன் இந்த சரீரத்திற்குள் பிறந்திருக்கிறார் என்றும், சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படியாக, அவருடைய ஜீவியத்தில் ஒரு அழைப்பு உள்ளது என்றும் நாம் விசுவாசிக்கிறோம். எங்கள் ஜெபத்தைக் கொண்டு, நாங்கள் உமக்குப் பின்னால் இருக்கிறோம் என்று, இன்றிரவு நாங்கள் இதற்கு சாட்சியாக இருக்கிறோம். என் சகோதரனே, தேவன் உம்மை வழிநடத்துவாராக.
நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம்.
15எங்கள் பரலோகப் பிதாவே, ஒரு - ஒரு ஊழியக்காரன் மேலே நடந்து வந்து, முழு சுவிசேஷத்தை அடையாளம் கண்டுகொள்வதை நான் காணும் போது, அது அப்படியே என்னுடைய ஆத்துமாவை பலப்படுத்துகிறது. வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் கிறிஸ்துவின் வார்த்தையோ ஒருக்காலும் ஒழிந்து போகாது என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார். அதன்பிறகு நாங்கள் காண்கிறோம், மேலும் நீர் சொல்லியிருக்கிறீர், நீர் புஸ்தகம் எழுதிக் கொண்டிருந்ததை முடித்தபோது, “யாராகிலும் இந்த புஸ்தகத்தோடு ஒரு வார்த்தையைக் கூட்டுவார்களானால், அல்லது இதைவிட்டு எதையாவது எடுத்துப் போடுவார்களானால், ஜீவ புஸ்தகத்திலிருந்து (அவனுடைய பங்கை ) எடுத்துப்போடுவேன்” என்று சொல்லியிருக்கிறீர்.
எங்கள் சகோதரன் மெக்கின்னி இதைக் கண்டிருக்கிறார். இவர் ஐக்கியம் வைத்துக் கொண்டிருந்த, இந்த ஒருகூட்ட சகோதரர்களிடத்தில், அவர் வேதவாக்கியத்தில் கண்ட ஒரு சத்தியத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். யாருமே அதற்கு எதிர்த்து நிற்க முடியவில்லை, ஆனாலும் அந்த ஸ்தாபனமானது அதை பொறுத்துக்கொள்ள முடியாதிருந்தது. எனவே, மனிதன் கூறியிருப்பதைப் பின்பற்றுவதா அல்லது தேவன் சொல்லியிருப்பதைப் பின்பற்றுவதா என்று இவர் தம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலைச் செய்கிறார். தேவனே, தேவன் என்ன சொல்லியிருக்கிறாரோ அதையே எடுத்துக்கொள்ளும்படி, நீர் இவருக்குக் கொடுத்திருக்கிற தைரியத்திற்காக நான் -நான் உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாகவும், தேவனுடைய வார்த்தையே சத்தியமாகவும் இருப்பதாக“ என்று வேதாகமம் கூறியுள்ளது. அவர் அதையே ஆதரிப்பதாக தீர்மானம் செய்திருக்கிறார்.
அவரோடு கூட எங்கள் ஐக்கியத்தைக் காண்பிக்கும்படியாகவோ, அல்லது அவருடைய சோதனையில் அவரோடு கூட நிற்கும்படியாகவும், அவருடைய ஜெயத்தில் அவரோடு கூட களிகூரும்படியாகவும், நாங்கள் ஒருமித்து போர்ச்சேவர்களாக இங்கேயிருக்கிறோம். நீர் எங்கள் சகோதரனை ஆசீர்வதிக்க வேண்டுமென்று இந்தக் கூடாரத்தின் மேய்ப்பரும், நானும், இவர் மேல் கரங்களை வைக்கிறோம். இவர் ஆவிக்குள் ஜீவிக்கும்படி செய்யும். சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு, இவரை வல்லமையால் நிறைத்தருளும். இவருடைய ஊழியத்தை பின்தொடரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் இவருக்குக் கொடுத்தருளும். இந்தக் கடைசி நாட்களில், இன்று அந்தகாரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான இழக்கப்பட்ட ஆத்துமாக்களை இரட்சிக்கும்படியாக, இவர் தாமே உமது கரத்திலுள்ள ஒரு கருவியாக இருப்பாராக. உமக்கென்று பிரதிஷ்டைபண்ணப்படுவாராக. இதை அருளும், கர்த்தாவே. இதுவே எங்கள் ஜெபமாக இருக்கிறது, எங்கள் சகோதரனிடத்திலுள்ள எங்கள் விசுவாசமும், எங்கள் நம்பிக்கையும், உம்மிடத்திலுள்ள விசுவாசமும், எங்கள் சகோதரனின் ஊழியத்திலுள்ள இந்த மகத்தான, தேவை மிகுந்த மணிவேளைக்காக எங்கள் ஜெபத்திற்கு நீர் பதிலளிக்க வேண்டுமென்பது தான் எங்கள் ஜெபமாக உள்ளது. இயேசுவின் நாமத்தில், நாங்கள் இவரை அனுப்புகிறோம். ஆமென்.
16சகோதரன் மெக்கின்னி அவர்களே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவனுடைய கிருபை தாமே உம்மோடு கூட எப்பொழுதும் தங்கியிருந்து, உம்முடைய இருதயத்தின் உத்தமமான வாஞ்சையை உமக்கு அருளிச் செய்வதாக. தேவன் உம்மோடு கூட இருப்பாராக.
வேதாகமத்தில், எனக்குத் தெரிந்த, ஊழியப் பிரதிஷ்டை இதுதான், ஐக்கியத்தின் வலது கரம். இந்தச் சபையில், சகோதரன் மெக்கின்னி அவர்களுக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுக்கிற எல்லாரும் உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். தேவனுடைய நித்திய வார்த்தையாயிருக்கிற இந்தக் காரியத்தின் பேரில் நீர் நிற்கும்படிக்கு உமக்கு உதவி செய்யும்படி, எங்கள் ஜெபங்களும், எங்கள் ஆதரவும்.
“எல்லா வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் அதுவோ இன்னும் நிலைநின்று கொண்டிருக்கும்.” ஏனென்றால், “ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. வார்த்தையானது மாம்சமாகி, எங்களோடு வாசம் பண்ணினார்.”
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று வார்த்தை கூறுகிறது. கொடியில் இருந்த அதே ஜீவன் தான், திராட்சச்செடியிலும் இருக்கிறது, திராட்சச்செடிக்குள் துடித்துக் கொண்டு (pulsates up), அதே கனிகளோடு கூட, அதே கிரியைகளோடு கூட, அதே காரியத்தோடு கூட, அதே ஜீவனைப் பிறப்பிக்கிறது. அது சாத்தியம் என்று நான் அறிந்திருக்கிறேன், ஏனென்றால் அது நிறைவேறுவதை நான் கண்டிருக்கிறேன். ஆமென், ஆமென். அந்த நல்ல, பழமையான சுவிசேஷ வழியை நான் விரும்புகிறேன். ஆம், ஐயா.
17இப்பொழுது நமக்கு ஒருக்கால் சற்று தாமதமாகிக்கொண்டு இருக்கலாம், 9:30 மணி ஆகப் போகிறது, ஆனால் இப்பொழுது நாம் இராப்போஜன ஆராதனையைக் கொண்டிருக்கப் போகிறோம்.
இப்பொழுது, நாம் அதை “இராப்போஜனம் (communion)” என்று அழைக்கிறோம், ஆனால் அது இராப்போஜனம் அல்ல. இராப்போஜனம் என்பது சம்பாஷணையாக (talk) இருக்கிறது, கூடிப்பேசுவது அல்லது உரையாடுவதாக (commune) உள்ளது. நாம் நிறுத்திவிட்டு, கர்த்தரோடு பேசுவது, தொடர்புகொள்வது தான் Commune என்பதாக இருக்கிறது. ஆனால், இப்பொழுதோ, இது கர்த்த ருடைய இரவுணவு (the Lord's supper)“ என்று அழைக்கப்பட்டது. இனியும் அதை ”இரவு உணவு (supper)“ என்று கூறாமல், அதை விருந்து (dinner)” என்று அழைக்கும் இந்த நவநாகரீகமானவர்களில் சிலர் எப்படி அவ்வாறு கூறுகிறார்கள் என்று வியப்பாயிருக்கிறது, அதைத் தவிர்த்துவிட்டு, எப்படி அவர்கள் இதை நடத்தப் போகிறார்களோ. பாருங்கள்? உஊ. புரிகிறதா? ஆம், ஐயா. இது கர்த்தருடைய இரவு உணவாக இருக்கிறது. வேதாகமம் அதைக் கூறுகிற விதமாகவே நாம் வேதாகமத்தை அப்படியே விசுவாசிக்கிறோம்.
நீங்கள் இதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம், மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், லூத்தரன்களும், நீங்கள் யாராகவும் இருக்கலாம், நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள், நம்மோடு இருக்கும் ஒரு சகோதரன், நீங்கள் இங்கே நிற்கும்படியாக, தேவனுடைய ஆவியால் பிறந்திருக்கிறீர்கள் என்றால், எங்களோடு இராப்போஜனம் எடுத்துக்கொள்ளுங்கள்.
இது இயேசு கிறிஸ்துவின் பிட்கப்பட்ட சரீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இதை எடுப்பது ஒரு கிறிஸ்தவனின் கடமை (duty-bound) என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். வந்து. இதை எடுக்கிற, சரியாக ஜீவிக்காத ஒரு மனிதன், சரியாக ஜீவித்துக் கொண்டிராமல் இருக்கும் ஒரு மனிதன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த காரணத்தினால் தான், கிறிஸ்தவர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும், இந்த சபைகள், முழுவதும் தூஷண நாமங்களால் நிறைந்துள்ளன என்று வேதாகமத்தில் காணப்படுகின்றன. உங்களுக்குப் புரிகிறதா? ஏனென்றால், இராப்போஜனத்தை எடுத்துக்கொண்டு, வெளியே போய் எந்தவிதமான ஒரு ஜீவியத்தையும் ஜீவித்து, அங்கே தேசம் முழுவதும் உள்ள கள்ளச்சாராயக் கடைகள் (bootleg joints) எல்லாவற்றைக் காட்டிலும் பெரிய இடற்கல்லைக் (stumbling block) கொண்டு வருகிறார்கள்.
18தெருவிலுள்ள ஒரு விபச்சாரியை நீங்கள் காண்கிறீர்கள், அவள் யாரென்று உங்களுக்குத் தெரியும். அவள் நடந்துகொள்ளும் விதத்தையும், அவள் உடை அணியும் விதத்தையும் பார்த்து, நீங்கள் அவளை அறிந்து கொள்கிறீர்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவனோ, அதை - அதைச் செய்யக் கூடாது. இங்கேயிருக்கும் ஒரு - ஒரு - ஒரு - ஒரு இடத்தை நீங்கள் காணும்போது, 'ஒயின்களும், விஸ்கியும் இருக்கும் மதுபானக் கடை!“ என்று கூறுகிறீர்கள், மற்றும் அதைப் போன்ற மற்றவைகளையும் கூறுகிறீர்கள். அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். அதெல்லாம் சரிதான். நடனமாடுதலும், பந்து விளையாட்டும், அதைப் போன்றவைகளும், அது என்னவென்று நீங்கள் அறிந்தது தான். ஆனால் அங்கிருக்கும் ஜனங்கள் குடித்துக்கொண்டும், சூதாட்டம் நடத்திக்கொண்டும், பொய் பேசிக்கொண்டும், திருடிக்கொண்டும், மற்ற எல்லாவற்றையும் செய்துகொண்டும் இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அது - அது அசுத்த ஆவிகளின் கூடாக இருக்கிறது.
ஆனால் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பதாக உரிமை கொண்டாடுகிற ஒரு இடத்தை நீங்கள் காணும் போது. அங்கே உள்ளே நடந்து செல்கிறீர்கள், முதலாவது காரியம் என்னவென்றால், ஒரு... ஐ பொருந்தும்படியாக, அதே வேதவாக்கியத்தை அவர்கள் மறுதலிப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஏனென்றால், அது அவர்களுடைய கோட்பாட்டிற்கு பொருந்தாத காரணத்தினால், அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் அங்கு உள்ளே வந்து, தேவனுடைய கிரியையைக் குறித்துப் பேசி, ஏதோவொன்றைச் செய்து, அதைப் பார்த்து நகைப்பதைக் காண்கிறீர்கள். ஆமாம். பொல்லாங்காயிருக்கும் அதுதான் அந்தக் காரியமாகும். அந்த ஜனங்கள் வந்து, இராப்போஜனம் எடுத்து, சரியாக அங்கே வெளியே தெருவில் சென்று, மற்றவர்களைப் போன்றே ஜீவிப்பதைக் காண்கிறீர்கள், அதுதான் அங்கேயுள்ள மிகப்பெரிய இடற்கல்லாக இருக்கிறது.
19நான் சமீபத்தில், “நியாயத்தீர்ப்பில் ஏமாற்றங்கள்” என்பதைக் குறித்து இங்கே பிரசங்கம் பண்ணினேன். அந்த கள்ளச் சாராயக்காரன், நரகத்திற்குப் போகும்படியாக அவன் தனக்கான தண்டனைத் தீர்ப்பைக் கேட்கும் போது, அது அவனை ஏமாற்றமடையச் செய்யப்போவதில்லை. அது பொய்யனாகவோ, திருடனாகவே இருந்தாலும், அவன் ஏமாற்றமடையப் போவதில்லை. ஆனால் தான் சரியாக இருப்பதாக எண்ணிக்கொள்ளும் ஒருவன், அவன்தான் ஏமாற்றமடையப் போகிறான். அது அவன்தான். அங்கே நிச்சயமாகவே அப்படிப்பட்ட ஏராளமானோர் இருக்கிறார்கள். நமக்கு அது தெரியும்.
20தேவன் நம்முடைய ஆத்துமாக்களின் மேல் இரக்கமாயிருப்பாராக. நாம் இதனோடு விளையாடிக் கொண்டிருக்க முடியாத ஏதோவொன்றாக இது இருக்கிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு, இங்கே எங்கள் மத்தியில் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார், அவர் உயிரோடு இருக்கிறார், அவர் ஒரு அருமையான சகோதரன், அவர்தான் சகோதரன் டெய்லர். அவர் இன்றிரவு மகிமையில் இருக்கிறார். கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் அவர் உள்ளே பிரவேசித்தார். ஏதோவொரு நாளில் நாமும் (போகப் போகிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், எனவே சரியாக ஜீவிக்கும்படியான நேரம் இப்பொழுதுதான். இப்பொழுதுதான் அந்த நேரம்.
21இந்தக் காலை பாடம் நினைவிருக்கிறதா? தலைக்கல்லானது அதன்மேல் வருவதற்கும் கூட முன்பாக, இந்த நற்பண்புகள் (virtues) அங்கே இருந்தாக வேண்டியிருக்கிறது. ஓ, நீங்கள் சத்தமிடலாம். நீங்கள் பாடலாம். நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, நடனம் ஆடலாம். அதற்கு இதனோடு எந்த சம்பந்தமுமே கிடையாது. இந்தக் காரியங்கள், வேதப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உங்களுக்குள்ளே முத்திரையிடப்பட்டு, ஒரு தனிப்பட்ட நபராக உங்களை பரிசுத்த ஆவியானவர் முத்திரையிடும் மட்டுமாக, அப்போது தான் நீங்கள் தேவனுடைய குமாரனும், குமாரத்தியுமாக இருக்கிறீர்கள்.
ஜனங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமலே, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். உங்களுக்கு அது தெரியும்.
மந்திரவாதிகள் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். மந்திரவாதிகள் அந்நிய பாஷைகளில் பேசி, மனிதனுடைய மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்து, பிசாசை அழைப்பதை நான் கண்டிருக்கிறேன். ஆம், ஐயா. எனவே, நீங்கள், அதுவல்ல... மந்திரவாதிகளையும், மாந்திரிகர்களையும் நான் கண்டிருக்கிறேன், ஒரு பென்சிலானது கீழே வைக்கப்பட்டு, அடுப்பு குழாயில் மேலும் கீழுமாக ஓடி, “shave and a haircut,” என்று இசைத்து, அறியப்படாத பாஷைகளில் எழுதும் நேரத்தை நான் பார்த்திருக்கிறேன். அப்போது ஒரு ஆள் அங்கே நின்றுகொண்டு, அப்படியே மேலும் கீழும் கிறுக்கலாக எழுதி, சரியாக அது என்ன சொல்லிக் கொண்டிருந்ததோ அதை எழுதி, கூறிக் கொண்டிருப்பான். இப்பொழுது, அது தேவன் இல்லை என்று உங்களுக்குத் தெரியும். அந்த காரியங்கள் எல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
எனவே அந்நிய பாஷைகளில் பேசுவது, நீங்கள் - நீங்கள் தேவனுடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதற்கு அர்த்தம் அல்ல. அற்புதங்களை நடப்பித்தலானது, நீங்கள் தேவனுடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதை நிரூபிப்பதில்லை.
அதுதான் காரியம், ஆவியின் கனிகள் தான் நீங்கள் தேவனுக்குள் இருக்கிறீர்கள் என்று நிரூபிக்கிறது, அந்த ஜீவனானது பரிசுத்த ஆவியினாலே முத்திரையிடப்பட்டிருப்பதை (sealed away) நீங்கள் காணும்போது.
தேவனே, அது இருக்கட்டும். அது நாங்களாக இருக்கட்டும். நாங்கள் பாவம் செய்திருப்போமானால், மகத்தான பரலோகப்பிதா தாமே அதற்காக எங்களை மன்னிப்பாராக.
22இயேசு ஆவியினூடாக நம்மோடு என்ன பேசியிருக்கிறார் என்பதை, நான் வேதவாக்கியங்களில் சிலவற்றை வாசிக்கப் போகிறேன். இப்பொழுது, நான் அதை 1 கொரிந்தியர் 11வது அதிகாரத்திலிருந்து வாசிக்கப் போகிறேன். நான் 23வது வசனத்தில் துவங்கப் போகிறேன். “ கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்...” பவுல் பேசிக் கொண்டிருப்பது போன்று நான் இப்பொழுது பேசுகிறேன்.
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம் பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில்,
அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
23இராப்போஜனத்தின் பேரிலுள்ள இதை நான் கூற விரும்புகிறேன். இப்பொழுது, அதுதான் இடையிலுள்ள பெரிய இடறலாக இருக்கிறது, கத்தோலிக்க சபையும் புரட்டஸ்டன்ட் சபையும் ஒருமிக்க விட்டு வெளியேற முடியாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்றால், இந்த இதே பொருளின் பேரில் தான் அதற்கான காரணம் இருக்கிறது. கத்தோலிக்கர்கள் அதை ஒரு பூசையாக எடுத்துக் கொள்கிறார்கள். லீகலிஸ்டும், அது ஏதோவொரு தகுதியின் மூலமாக என்று நம்புகிறான், அவன் செய்திருப்பதின் மூலமாகவும், இந்த ஒழுங்கைக் கடைப்பிடிப்பதின் மூலமாகவும் தான், அவன் தன் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்வான் என்று நம்புகிறான். புரட்டஸ்டன்டு, ஸ்தோத்திரம் செலுத்துவதின் மூலமாக, அவனுடைய பாவம் மன்னிக்கப்படுகிறது என்று அதை எடுத்துக்கொள்ளுகிறான், ஏனென்றால் அவன் ஒரு கட்டளைக்கு கீழ்படிந்திருக்கிறான் என்ற காரணத்தினால்.
இப்பொழுது, அப்பம், அது எழுத்தின்படியான சரீரம் (literal body) என்று கத்தோலிக்கர்கள் கூறுகிறார்கள். அவர்கள் உபயோகிக்கிற வேதவாக்கியம் இதுதான், இங்கே கொரிந்தியர்களில் இருந்துதான், அவர்கள்
அதை உபயோகிக்கிறார்கள், 1 கொரிந்தியர் 11.
“வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்று இயேசு கூறினாரே' என்று கூறுகிறார்கள்.
புரட்டஸ்டன்ட், “அது சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று கூறுகிறான்.
24இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், இயேசு, “இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்று கூறினபோது, இன்னுமாக இயேசுவின் சரீரமானது (பலியாகக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அவர் அப்பத்தைப் பிட்டு, வாங்கிப் புசியுங்கள்: இது என்னுடைய சரீரமாயிருக்கிறது“ என்றார். அவருடைய சரீரமானது இன்னுமாகப் பிட்கப்பட்டிருக்கவில்லை. எனவே அவர்களுடையஅவர்களுடைய சொந்த வேதவாக்கியமே, அவர்கள் உபயோகிக்கிற அந்த சொந்த காரியமே, அவர்களுடைய சொந்த உபதேசத்தின் மேல் ஆக்கினைத்தீர்ப்பைக் கொண்டு வருகிறது. புரிகிறதா? இயேசு அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டு, அவர்களிடம் கொடுத்து, ”இது என்னுடைய சரீரமாயிருக்கிறது. வாங்கிப் புசியுங்கள்“ என்று கூறினார். இதோ அவர் தம்முடைய சரீரத்திலேயே அங்கே நின்று கொண்டிருந்தார். அது இன்னுமாக ஒருபோதும் பிட்கப்பட்டிருக்கவில்லை . ஊ! எது எப்படியானாலும், வேதவாக்கியம் பொய் சொல்லாது. அவை எல்லா நேரங்களிலும் தங்களைத் தாங்களே தெளிவாக வைத்துக்கொள்ளும். எனவே, நாம் அதை விசுவாசிக்கிறோம்.
25நாம் ஒன்றாகக் கூடிவரும்போது, அவர், “ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் (Tarry)” என்று கூறினார் என்று நாம் விசுவாசிக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறினால், ஒருவர் பேரில் ஒருவர் காத்துக் கொண்டிருங்கள்.“ தாமதித்தல் (tarry) என்ற வார்த்தைக்கு காத்திருத்தல்” என்று அர்த்தம். “ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.”
இப்பொழுது, நமக்கு இருக்கிற வழக்கத்தின்படியே, இந்த விதத்தில் தான் நாம் அந்த வேதவாக்கியத்தை ஏற்றுக்கொள்கிறோம். அது, நாம் இதைச் செய்யும் போது, நாம் நம்முடைய தலைகளை வணங்கி, மேய்ப்பர்களாகிய எங்களுக்காக சபையார் ஜெபிக்கிறார்கள். நம்முடைய சபையாருக்காக மேய்ப்பர்களாகிய நாங்கள் ஜெபிக்கிறோம். அவ்வாறுதான் நாம் ஒருவருக்காக ஒருவர் காத்திருக்கிறோம், அது ஒருவருக்காக ஒருவர் உதவியாயிருப்பதன் மூலமாகவும், ஜெபம் பண்ணுவதன் மூலமாகவும் தான்.
நீங்கள், “தேவனே, என்னுடைய மேய்ப்பரை மன்னித்தருளும். அவர்கள் - அவர்கள் செய்திருக்கிற ஏதாவது அங்கே அவருடைய ஜீவியத்தில் இருக்குமானால், அதற்காக அவர்களை மன்னியும். அவர்களை மன்னித்தருளும். அதைச் செய்ய வேண்டுமென்று அவர்கள் கருதவில்லை.”
அதன்பிறகு, நாம் சரியாக மேய்ப்பர்கள், நம்முடைய சபையாருக்காக, “தேவனே, அக்கறை எடுத்து, கவனிக்கும்படியாக, நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்தச் சிறு மந்தையாக இது இருக்கிறது. அவர்களுடைய ஜீவியத்தில் ஏதாகிலும் தவறு இருக்குமானால், பிதாவே, அதை எடுத்துப்போடும். அவர்கள்... எனவே நாங்கள் எல்லாரும் ஒருமித்து சுற்றிலும் நின்று, சுற்றிலும் ஐக்கியம் கொண்டு, நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்றும், தேவனுடைய ஒழுங்கைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம் என்றும், இராப்போஜனத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து கொள்ள முடியுமே” என்று ஜெபிக்கும்படி திரும்பி வருகிறோம். அது ஒரு இனிமையான ஐக்கியத்தின் நேரமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
26நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாம் இப்பொழுது ஜெபம் செய்வோம். பேசாமல் அமைதியாக, நீங்கள் எங்களுக்காகவும், நாங்கள் உங்களுக்காகவும் ஜெபம் பண்ணுவோம். [சபையார் அமைதியாக ஜெபம் பண்ணுகையில், சகோதரன் பிரன்ஹாம் 40 வினாடிகளுக்கு ஒரு ஜெபத்தை மெதுவாக கிசுகிசுத்தபடி மெல்ல ஜெபிக்கிறார் - ஆசிரியர்.)
பிதாவே, நாங்கள் இந்த இராப்போஜனத்தை எடுக்கையில், நாங்கள் இதை இராப்போஜனம் என்று அழைக்கையில், அது உம்மை நினைவுகூருவதாக இருக்கிறது. இந்தச் சிறு அடிக்கப்பட்ட மெல்லிய ரொட்டித் துண்டானது (wafer), எங்கள் நாவுகளைத் தொட்டு, எங்கள் வாய்க்குள் போகும் போது, அவர் எங்கள் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டு, கசக்கப்பட்டு, கிழிக்கப்பட்டார் என்று நாங்கள் தாமே அடையாளம் கண்டு கொள்வோமாக. அவரை எங்களை விட்டு மறைத்து வைத்திருக்கிற திரையானது, பரிசுத்த ஆவியாகிய அவர் இப்பொழுதே எங்களுக்குள்ளிருக்கிறார்.
நாங்கள் திராட்சை ரசத்தை வாங்கும் போது, அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமாகிறோம் என்றும், அவருடைய இரத்தத்தினாலே, நாங்கள் இரட்சிக்கப்படுகிறோம் என்றும், இரத்தத்தில் இருந்த ஜீவன் என்றும் நாங்கள் உணருவோமாக.
இப்பொழுதும், பிதாவே, இந்த புனிதமான வேளைக்காக, எங்களை ஒருமிக்க ஒன்று சேர்த்து, எங்கள் பாவங்களை மன்னித்தருளும். இயேசுவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென்.
27இப்பொழுது, மூப்பர்கள், அவர்களில் ஒருவர், இங்கே முன்னால் வருவார் என்று நம்புகிறேன். அது, வழக்கமாக, இராப்போஜனத்திற்காக அழைப்பு விடுக்கும்படி, முன்னால் வருவது சகோதரன் டெய்லருடைய உத்தியோகமாகவும் கூட இருந்தது என்று நம்புகிறேன் (இல்லையா?). அந்த இடத்தை யார் எடுப்பார்களோ என்று வியப்படைகிறேன்? சகோதரன் டோனி, நீங்கள் அதைச் செய்வீர்களா? இங்கேயிருக்கும் சகோதரன் சேபல், முன்னால் வந்து, நடத்துவீர்களா? நாம் முன்னே வருகையில், வரிசை வரிசையாக, இராப்போஜனம் எடுத்துவிட்டு, நம்முடைய இருக்கைகளுக்குத் திரும்பிச் செல்வோம்.
தெய்வீக சுகமளித்தல் என்பது இராப்போஜனத்தில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? இஸ்ரவேல் ஜனங்கள், முன்னடையாளமாக, இராப்போஜனம் எடுத்து, நாற்பது வருஷம் யாத்திரை செய்தார்கள். அவர்கள் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்த போது, அவர்கள் மத்தியில் ஒருவனும் பலவீனமாயிருந்ததில்லை: இருபத்தைந்து இலட்சம் பேர்கள். இராப்போஜனத்தில் சுகமாக்கும் வல்லமையுண்டு.
எல்லாரும் இப்பொழுது வரவேற்கப்படுகிறீர்கள்.
எங்கள் சகோதரியே, அவள் பியானோ இசைக்கருவியிடம் வந்து, இந்தப் பாடலை வாசிப்பாளா?
இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட
இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்றுண்டே,
அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும் பாவிகள்
தங்கள் பாவக் கறைகள் அனைத்தையும் போக்கிக் கொள்கின்றனர்.
பிள்ளைகளே, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக. நாம் இந்தப் பிரயாணத்தில் இருக்கையில், தேவனுடைய கிருபை தாமே எப்பொழுதும் உங்களோடு இருப்பதாக நாமெல்லாரும் மீண்டும் சந்தோஷத்தோடும் வாலிப வயதினராகவும் மறுகரையில் சந்திப்போமாக. ஆமென்.
[பியானோ வாசிப்பவர், இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்றுண்டே என்ற பாடலை வாசிக்கத் தொடங்குகிறார், இராப்போஜன அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் வாங்கும்படியாக, முதலாவது நபர் முன்னே வருகையில், சபையார் ஒருநிமிடம் அமைதியாக இருந்தவண்ணமாக இருக்கிறார்கள். பியானோ வாசிப்பவர் வாசிப்பதை நிறுத்துகிறார் - ஆசிரியர்.)
28நான் இன்றிரவு, இங்கேயுள்ள இந்தச் சிறு charger-ல் இதைப் பிடித்துக்கொண்டிருக்கையில், இது நம்முடைய ஆண்டவரின் மாம்சத்தைப் (flesh) பிரதிநிதித்துவப்படுத்துகிற அப்பமாகவும், ஒரு கோஷர் அப்பமானது கிறிஸ்தவ கரங்களால் செய்யப்பட்டதாகவும் இருக்கிறது. மேலும் இப்பொழுது, நம்முடைய ஆண்டவரின் நொறுக்கப்பட்ட சரீரத்தின் ஒரு அடையாளமாக இது நம்மிடம் வருகிறது.
நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம்.
பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்காக ஏற்படுத்தியிருக்கிற இந்த விலையேறப்பெற்ற பரிகாரம், இந்த பலி, நாங்கள் இந்த அப்பத்தில், உம்முடைய சரீரத்தின் பாடுகளையும், அது கிழிக்கப்பட்டதையும் காண்கிறோம். ஓ, கர்த்தாவே, அவசியமாயிருந்த அந்த நீதியை நிறைவேற்றும்படி, ஒரு பரிகாரத்தை ஏற்படுத்தும்படியாக, தம்மைத்தாமே சுக்குநூறாகக் கிழிக்கப்பட வேண்டி, தேவன் மாம்சத்தை உண்டாக்கினார் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கும் போது, மனத்தாழ்மையில், அது எங்களுடைய இருதயங்களில் இரத்தம் கசிய வைக்கிறது, கண்ணீர் சிந்த வைக்கிறது. அதன்பிறகு , எதுவுமேயில்லாமல், கிருபையினால், நாங்கள் வரும்படி அழைக்கப்பட்டோம். பிதாவே, நாங்கள் எவ்வளவாக உமக்கு நன்றி செலுத்துகிறோம்! இப்பொழுது இதனுடைய கருதப்பட்ட நோக்கம் மற்றும் காரணத்திற்காக, இந்த அப்பத்தை நீர் பரிசுத்தப்படுத்தியருளும். இதை யார் உட்கொண்டாலும், அவர்கள் தாமே தங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிற நித்திய ஜீவனைக் கொண்டிருப்பார்களாக அவர்கள் ஒருபோதும் அழிந்து போகாமல், ஆனால் தேவனோடு நித்திய காலமாக ஜீவிப்பார்களாக. இந்தப் பிரயாணத்திற்காக அவர்களுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் அருளும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
29“போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இது புதிய உடன்படிக்கைக்கான இரத்தமாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம், அவர் வரும் வரையில், ஆண்டவரின் மரணத்தை வெளிப்படையாக அறிவிக்கிறீர்கள் என்றார். திராட்சைச் செடியின் கனியை நான் என்னுடைய கரத்தில் பிடித்திருக்கிறேன். அது கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அவர்கள் திராட்சை ரசத்தை (wine), வழக்கமான திராட்சை ரசத்தைக் (regular wine) குடித்திருக்க மாட்டார்கள் என்றும், ஏனென்றால் அது ஒரு போதை தரும் மதுவாக இருந்தது என்றும், அது ஒரு மதுபானமாக இருந்தது என்றும், அவர்கள் ஒயினைக் குடிக்கக் கூடாதே என்றும் அநேகரால் கூறப்பட்டுள்ளது. அவர்கள் திராட்சைப்பழ சாற்றை (grape juice) எடுத்துக்கொள்கிறார்கள்.
நாம் திராட்சரசத்தை (wine) எடுத்துக்கொள்வதற்குக் காரணம் என்னவென்றால், வேதாகமம், “திராட்சரசம் (Wine)” என்று கூறுகிறது. வேறொரு காரணம் என்னவென்றால், திராட்சை ரசம் பழையதாக ஆகும் போது, அது மிக நன்றாகவும், வீரியமுள்ளதாகவும் ஆகிவிடுகிறது. திராட்சைப்பழ சாறோ (Grape juice) ஒரு சில மணி நேரங்களுக்குள் புளிப்பாகி விடுகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது வருடங்கள் கடந்து செல்ல செல்ல, இனிமையாகவும் மிக நன்றாகவும் ஆகிவிடுகிறது. அது ஒருபோதும் புளிப்பாகவோ அல்லது கெட்டுப்போனதாகவோ ஆவதில்லை.
30எங்கள் பரலோகப் பிதாவே, நான் இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற திராட்சையின் செந்நீரை (the blood of the grapes) இந்த charger-ல் பிடித்திருக்கிறேன், மேலும் இப்பொழுது, இதில், அவருடைய தழும்புகளால், நாங்கள் குணமானோம். அவருடைய இரத்தத்தில் தான் நாங்கள் இரட்சிக்கப்பட்டோம். கவிஞன் இவ்வாறு கூறுகிறான்:
உம் காயங்களிலிருந்து ஓடும் அந்த இரத்த நதியை
நான் விசுவாசத்தில் கண்ட முதற்கு,
மீட்பின் அன்பே என் பாடும்பொருளாய் உள்ளது,
என் மரணம் வரைக்கும் அவ்வாறே இருக்கும்.
பிதாவாகிய தேவனே, அதுதான் எங்கள் பாடும் பொருளாகவும் உள்ளது, பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு எங்களுடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. இது எந்த நோக்கத்திற்காக உத்தேசிக்கப்பட்டதோ அதற்காக, இந்தத் திராட்சரசத்தை பரிசுத்தப்படுத்தும், கர்த்தாவே. நாங்கள் இதைக் குடிக்கையில், இது அங்கே கல்வாரியில் பட்ட பாடுகளைக் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நினைவுகூருகிறோம், கொடூரமாக, பரிகாசம் செய்யப்பட்டு, முட்கள் தோல் வழியாக உடைத்துக்கொண்டு போய், இரத்தம் வெளியே வரும் அளவுக்கு, முட்கள் அவருடைய புருவத்தில் அழுத்தப்பட்டது. கொடுமைப்படுத்தும் சவுக்கானது, தோல்வாரின் முனையிலிருந்த ஈயக்குண்டுகளைக் (lead sinkers) கொண்டிருந்த ஒன்பது முடிச்சுகள் உடைய நீண்ட தோல் வாராக (cat-of-nine-tail) இருந்து, அவருடைய விலா எலும்புகள் அதனூடாகத் தெரியும் அளவுக்கு, அவருடைய முதுகு அடிக்கப்பட்டது. ரோம ஆணிகள் அவருடைய கால்கள் மற்றும் கைகளினூடாக கடாவப்பட்டன. ஈட்டியானது அவருடைய இருதயத்தினூடாக ஊடுருவிச் சென்றது. அது தகுதியற்றவர்களாகிய எங்களுக்காக உள்ள அவருடைய அன்பாக இருந்தது.
வெட்கத்துடனே கூட, நாங்கள் தலையைத் தாழ்த்துகிறோம், கர்த்தாவே, எங்களை மீட்கும்படி, தேவகுமாரனுக்கு அவ்வளவு ஒரு கிரயத்தை அது கிரயத்தொகையாக ஆக்கியதே. அதன்பிறகு எப்படியாக, எங்களுடைய ஆவிக்குள், நாங்கள் வரும்படியாக எங்களுக்குக் கிருபையைக் கொடுத்து, அந்த நம்பிக்கையைக் கொடுத்ததற்காக, நாங்கள் எங்கள் ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கிறோம். நீர், “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் அவனை மீண்டும் கடைசி நாளில் எழுப்புவேன்” என்று சொல்லியிருக்கிறீர். அப்படிப்பட்ட உதடுகளிலிருந்து அது வந்திருக்கும் போது, அது எவ்வாறு தவறிப்போக முடியும்! நாங்கள் மறுபடியும் உயிரோடு எழும்புவோம்.
31மேலும், பிதாவே, இன்றிரவு, நாங்கள் இங்கே ஆரோக்கியத்தோடு நின்று கொண்டிருக்கையில், உமது கிருபையினாலே, பலமாகவும், ஆரோக்கியமாகவும், மனதில் சரியாகவும் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுகையில், எங்கள் கர்த்தருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலில் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பதை உமக்குக் காண்பிக்கும்படியாக, நாங்கள் இதை எடுக்க வருகிறோம். நாங்கள் அவரை எங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோம். எங்களுடைய தேவனாகவும் இராஜாவாகவும் நாங்கள் அவரை விசுவாசிக்கிறோம்.
இந்த திராட்சை ரசத்தைக் கொண்டு உத்தேசிக்கப்பட்ட நோக்கத்திற்காக, இந்த திராட்சை ரசத்தைப் பரிசுத்தப்படுத்தும். இதை எடுக்கிற ஒவ்வொரு நபரும், அவர்களுடைய ஜீவிய காலம் முழுவதும் தேவனைச் சேவிக்கும்படியாக, அவர்கள் தாமே தெய்வீக கிருபையையும், பரிசுத்த ஆவியையும், நல்ல ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெற்றுக்கொள்வார்களாக,
[பியானோ இசைக்கருவி வாசிப்பவர், இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே என்ற பாடலை இசைக்கத் தொடங்குகிறார். ஒலிநாடாவில் காலியிடம். சகோதரன் பிரன்ஹாமும் சபையோரும் இராப்போஜன அப்பத்திலும் திராட்ச ரசத்திலும் பங்கு கொள்கிறார்கள். - ஆசிரியர்.)
கல்வாரி ஆட்டுக்குட்டியே,
தெய்வீக இரட்சகரே;
இப்பொழுது நான் ஜெபிக்கையில் செவிகொடும்,
என் பாவங்களையெல்லாம் எடுத்துப்போடும்,
ஓ, இன்றைய நாளிலிருந்து நான்
முற்றிலும் உம்முடையவனாக இருப்பேனாக!
32வேதவாசிப்பில், பரிசுத்த யோவான் புத்தகம், 13ம் அதிகாரம், 13வது அதிகாரம், 2ம் வசனம் தொடங்கி, நாம் வாசிப்போம்.
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்;
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
பசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும் கூடக் கழுவவேண்டும் என்றான்.
இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.
அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான்.
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
33இது மிகவும் அழகான வசனங்களில் ஒன்றாகும் என்று நினைக்கிறேன். “நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” நினைவுகூரும்படியாக, நாம் ஒருவருக்கொருவர் இதைச் செய்ய வேண்டும். நாம் எப்பொழுது துவங்கினோமோ அது முதற்கொண்டு, இது இந்தச் சபையின் ஒரு நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. இந்தக் கூடாரமானது எப்பொழுதாவது கட்டப்படுவதற்கு முன்பே, நாங்கள் இன்னும் வீட்டு ஜெபக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போதே , நாங்கள் கால்கழுவுதலைக் கடைபிடித்தோம். எங்கள் சகோதரிகள் பின்னால் இருந்த அறைக்குப் போவார்கள். எங்கள் சகோதரர்கள் வலது புறத்தில் இருந்த அறைக்குச் செல்வார்கள். தொடர்ந்து நாங்கள் கால்கழுவுதலை கடைப்பிடிக்கிறோம். இன்றிரவு அந்நியர்கள் எங்களோடு இருப்பார்களானால், தேவனுடைய நியமங்களில் ஐக்கியம் கொள்ளும்படியாக உங்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் சந்தோஷமாக மாத்திரம் இருக்கிறோம்.
34செய்யும்படி தேவன் நம்மிடம் விட்ட காரியத்தைக் குறித்து, நான் சற்று முன்பு சொன்னபடி, நான் விவரித்திருக்கலாம். தண்ணீர் ஞானஸ்நானம், ஒரு விஷயமாக இருக்கிறது; இராப்போஜனம். மேலும், அது இரண்டு மட்டும் தான் என்பதை நினைவுகூருங்கள். தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார். கால்கழுவுதல் தான் அந்த மூன்றாவது காரியமாகும். புரிகிறதா? வேதாகமத்திலும் கூட, அநேக வருடங்கள் கழித்து, நாம் அதை நினைவுகூருகிறோம்.
இது அவசியமில்லை என்று சில ஜனங்கள் கூற முயற்சிக்கலாம். நிச்சயமாக, ஜனங்களுடைய கால்களைக் கழுவ வேண்டியது அவசியம் என்று நான் கூறக் கருதவில்லை . அது அதுவல்ல. ஒருக்கால் அவர்களுடைய கால்கள் கழுவப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மனத்தாழ்மையின் ஒரு செயலாக இருந்தது. தண்ணீர் ஞானஸ்நானம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமாக இதைச் செய்வதும் இருக்கிறது. ஏனென்றால் அவர் இங்கே, “நான் உங்களுக்குச் செய்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டுமென்று, உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு விதவையானவள், அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களின் கால்களைக் கழுவி, நமக்கு தாழ்மையைக் காண்பித்தாலன்றி, அவளை ஜனங்கள் மத்தியில் (விதவைகள் கூட்டத்தில்) சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதை நாம் கண்டுகொள்கிறோம்.
இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிற ஏதாகிலும் உண்டு என்றால், அது தாழ்மையாக இருப்பது தான், ஏனென்றால் அதுவே வல்லமையின் இரகசியமாக இருக்கிறது, அது மனத்தாழ்மையின் மூலமாகத்தான். அவைகளைச் செய்து கொண்டிருந்தீர்களே, அந்தக் காரியங்களை விட்டு நீங்கள் வெளியே வரும்போது, நீங்கள் எப்போதுமே சந்தோஷமாயிருக்கிறீர்கள், நாம் இங்கே சபையில் கடைப்பிடிக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ஐக்கியத்தின் ஒழுங்காக அது இருக்கிறது.
35அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகள் இருக்கும் என்று நான் இப்பொழுது அறிவிப்பு செய்ய விரும்புகிறேன். அப்படியே நான் உள்ளே வந்தபோது, சில அழைப்புகள் வந்தன, ஜெபிக்கும்படியாக சில ஜனங்கள் வருகிறார்கள், அவர்கள் இங்கே அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருக்கும்படியாக, மேலே டொரான்டோ, கனடாவிலிருந்து வருகிறார்கள்.
சகோதரன் ஹூவர் அவர்களின் சபையின் பிரதிஷ்டை எனக்கு இருக்கிறது. அது அறிவிப்பு - அறிக்கைப் பலகையில் உள்ளது. அது அடுத்த ஞாயிற்றுக்கிழமை, 11 மணிக்கு, கென்டக்கியிலுள்ள எலிசபெத்டவுனில் வைத்து நடைபெறும்.
அதன்பிறகு தொடர்ந்து நடைபெறும் காரியங்களுக்காக, இந்த அடுத்து வருகிற ஞாயிறு இரவில் இங்கே திரும்பி வருவோம். பிறகு அங்கிருந்து, நாங்கள் ஷிரிவ்போர்ட்டுக்குப் போகிறோம்.
36நாள் முழுவதும் நீங்கள் யாவரும் எங்களோடு கூட இருக்கும்படியாக, நாங்கள் உங்களைக் கொண்டிருப்பதற்காக சந்தோஷப்படுகிறோம். நாம்.... நேரங்களில் நீங்கள் சுற்றிலும் இந்தப் பட்டணத்திலோ, அருகில் எந்த இடத்தில் இருந்தாலும், வெளியில் வாருங்கள். நாமாகவே ஒருமித்து ஒன்றுசேர்ந்து, கூடிவர விரும்புகிறோம். இங்கேயிருக்கும் எங்கள் சகோதரன் நெவில் அவர்களுடைய போதனையின் கீழ் உட்கார்ந்து, தேவனைக் குறித்த காரியங்களில் பங்கு கொள்ள விரும்புகிறோம். அவர் தேவனிடமிருந்து அவைகளைக் கண்டுகொள்கையில், அவர் அவைகளைப் போதிக்கிறார் (gives out). “நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நாம் அடிக்கடி ஒன்றாகக் கூடிவர வேண்டும்.” நாம் சபைக்கு வருவதை நம்முடைய இருதயங்களில் நிச்சயமாக நேசித்தாக வேண்டும். நாம் சபையை நேசிக்காவிட்டால், தேவனை.... நேசியுங்கள். ஒன்றாகக் கூடிவருவது, அதைத்தான் நாம் சபை என்று அழைக்கிறோம், ஆராதிக்கும்படியாக, ஒன்றாகக் கூடிவருவது. புரிகிறதா? நாம் கிறிஸ்துவை நேசித்தால், நாம் மீண்டும் ஆராதிப்போம்.
ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை நேசிப்பதாகச் சொல்லிவிட்டு, நீண்ட காலமாக அவளைக் காணாமல் இருந்து, சரியாக அருகில் கடந்து சென்று, “நல்லது, வேறு ஏதாவது ஒரு நேரத்தில் நான் அவளைப் பார்ப்பேன்” என்று கூறுவதை நீங்கள் கற்பனை செய்கிறீர்களா? பாருங்கள் ? அதுவல்ல. அல்லது, மனைவி தன்னுடைய கணவனை நேசிப்பதாகச் சொல்லிவிட்டு, அல்லது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு, அவ்வாறு செய்வார்களா, நல்லது, அது - அது காண்பிக்கிறது. பாருங்கள்?
37நாம் வெளிப்புறமாக காண்பிப்பது, நாம் கர்த்தரை ஆராதிக்கும்படியாக ஒன்றுகூடி வரும்போது, நாம் அவரை ஆராதிக்கும்படி, எந்தவிடத்திலும், நாம் ஆராதனையில் இருக்கும்படி, எப்போதுமே ஏங்கி ஆசைப்படுகிறவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரை வீட்டிலும் ஆராதியுங்கள். நாம் நம்முடைய கார்களை ஓட்டிக் கொண்டிருக்கையிலும், அவரை ஆராதிப்போம். நாம் எங்கேயிருந்தாலும், கர்த்தரை ஆராதித்து, அப்படியே ஜெபம் பண்ணுவோம்.
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக என்று வேதாகமம் கூறுகிறது. பிறகு அவன், “கர்த்தரைத் துதியுங்கள்” என்று கூறினான். உங்களுக்கு எந்த சுவாசமும் இல்லாமல் இருந்தாலும்கூட, இருப்பினும் கர்த்தரைத் துதியுங்கள். பாருங்கள்? துதியுங்கள்! “சுவாசமுள்ள யாவும், கர்த்தரைத் துதிப்பதாக” அதன்பிறகு, “கர்த்தரைத் துதியுங்கள்.” அது சங்கீதம் 100 என்று நினைக்கிறேன், 100வது சங்கீதம்.
இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் இப்பொழுது கலைந்து செல்லும்படியாக நின்று கொண்டு, மீண்டுமாகப் பாடுகையில், கால்கழுவுதலுக்காக, சகோதரர்கள் இந்த அறைக்கும், சகோதரிகள் அந்த அறைக்கும் போவார்கள்.
போக வேண்டியிருக்கிற நீங்கள், ஏன், இன்னும் கொஞ்ச நேரத்தில், நீங்கள் - நீங்கள் கலைந்து போகப்போகிறீர்கள். ஆனால், அதன்பிறகு, நமக்கு இருக்கும் எந்த ஆராதனைக்கும் உங்களை அழைப்பு விடுப்பதில் சந்தோஷமுடையவர்களாக இருப்போம். வாருங்கள், இயேசு கிறிஸ்துவின் பாதங்களுக்கு உங்களுடைய ஆத்துமாவை வழிநடத்தும்படியாக, எப்படி செய்வது என்று எங்களுக்குத் தெரிந்த சிறந்ததை நாங்கள் செய்ய முயற்சிப்போம்.
இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல்,
துன்ப துக்கத்தில் இருக்கும் பிள்ளையே,
அது சந்தோஷம் சமாதானம் தரும்,
ஓ, அதைப் போகும் எவ்விடமும் எடுத்துச் செல்லுவீர்.
விலை ....
இப்பொழுது சுற்றிலும் திரும்பி ஒருவருக்கொருவர் கரங்களைக் குலுக்குங்கள்.
..... எவ்வளவு இனிமையுள்ளது ! பூமியின் நம்பிக்கையும்.... சந்தோஷமும்.
[சகோதரன் மெக்கின்னி ஜெபம் பண்ணுவதைக் குறித்து சகோதரன் பிரன்ஹாம் அவர்கள் யாரோ ஒருவரிடம் பேசுகிறார் - ஆசிரியர்.) .........
...இனிமையுள்ளது!
பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்
இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில், நாம் பாடுவோம்.
இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல்,
ஒவ்வொரு கண்ணிக்கும் கேடகமாக
உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது,
அந்த ...ஐ உச்சரி.
(சகோதரன் பிரன்ஹாம் யாரோ ஒருவரிடம் பேசுகிறார் - ஆசிரியர்.] ?
விலை -... விலையுயர்ந்த நாமம் , ஓ எவ்வளவு இனிமையானது!
பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்;
விலையுயர்ந்த நாமம் , ஓ எவ்வளவு இனிமையானது!
பூலோகத்தின் நம்பிக்கையும்... (ஜெபத்தில் எங்களை அனுப்பிவிடும்படி, உம்மைக் கேட்டுக்கொள்ளப் போகிறோம்.) பரலோகத்தின் .....
இப்பொழுது, நாம் தாழ்மையோடு நம்முடைய தலைகளை வணங்குகையில், இங்கேயுள்ள நமது சகோதரன் மெக்கின்னி அவர்கள் ஒரு சிறு ஜெபம் செய்து, நம்மை அனுப்பிவிடும்படியாக நாங்கள் கேட்டுக்கொள்ளப் போகிறோம். பிறகு உடனடியாக, போக வேண்டியவர்கள் போகலாம். மற்றவர்கள் அறைகளில் ஒன்று கூடுவார்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோதரன் மெக்கின்னி.
(குறிப்பு: இந்தச் செய்தியின் இறுதி திருத்தம் இன்னும் முடியவில்லை. இது புத்தகமாக அச்சிடும் போது, இறுதி திருத்தம் செய்து வெளிவரும்.)